Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், தற்போது ஐந்து இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு 65 ஆயிரம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாகவும், தஞ்சாவூர், மதுரை, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பை இளைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |