நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இணையில்லாத 23 வயது இளைஞர் உயிரிழந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிக அளவில் இணைந்து இளைஞர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மாஸ்க் போடாமல் திரிகின்றனர்.கொரோனாவுக்கு கெத்து என்றெல்லாம் தெரியாது. உயிரை பறித்துவிடும். மாஸ்க் போடவில்லை என்றால் உங்களுக்கும், உங்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.