Categories
மாநில செய்திகள்

தமிழக ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர் விருது….. 1 லட்சம் பரிசுத்தொகை….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் அரசு மற்றும்  பள்ளி நிர்வாகங்கள் சார்பாக பேச்சு, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கிராமப்புற பகுதியிலுள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் அம்மாணவர்களுக்கு என்று தனியாக விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 12ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதனை தொடர்ந்து தற்போது கிராமபுற மாணவர்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஊரக பகுதியிலுள்ள மாணவர்களின் அறிவியல் ஆய்வு திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடப்பு ஆண்டு ஊரக அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் அடிப்படையில் 2 சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படஇருக்கிறது. இந்த விருது பெற விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் sciencecitychennai.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக முன்மொழியப்பட்டு அறிவியல் நகரத்துக்கு மார்ச் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் தேர்தெடுக்கப்படுபவர்களுக்கு 1 லட்சம் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |