Categories
மாநில செய்திகள்

தமிழக எல்லையில் கோர விபத்து…. புது மாப்பிள்ளை உயிரிழந்த சோகம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் தமிழக கர்நாடக எல்லையில் காரும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காரை ஓட்டிச் சென்ற திருமணமாகி 3 மாதமே ஆன நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதாவது 3 நண்பர்களுடன் காரில் தேனியை சேர்ந்த ஜான் என்ற வழக்கறிஞர் மைசூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது சிக்கோலா அணை அருகே எதிரே வந்த சரக்கு லாரி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதனால காரை ஓட்டிச்சென்ற ஜான் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் காரில் இருந்த மற்ற 3 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |