கர்நாடகாவில் கன்னட அமைப்பினர் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மராட்டிய மேம்பாட்டு ஆணையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழக எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மைசூர், சாம்ராஜ் நகர், கொள்ளேகால் பகுதிக்கு செல்லும் தமிழகப் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு உள்ளன. அது மட்டுமன்றி இரு மாநில எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பகுதிக்கு தலமலை வழியாக தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.