நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு நிறைய சலுகைகளையும் சிறப்பு வசதிகளையும் வழங்கி வருகிறது. அவற்றில் முக்கியமான ஒன்றுதான் டோர் ஸ்டெப் டிஜிட்டல் சர்டிபிகேட். அதாவது ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்து சமர்ப்பிக்கும் வசதி. பென்ஷன் வாங்கக்கூடிய நபர்கள் தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை தெரிவிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் இந்த டிஜிட்டல் சான்றிதழை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது அவசியம்.
இந்தச் சான்றிதழை சமர்ப்பிக்க அவர்கள் நடையாய் நடக்க வேண்டி இருந்தது. இதனால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதில் சலுகை வழங்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சி ஓய்வூதியதாரர்களுக்கு விளக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதன்படி ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் இந்திய தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் மூலமாக ஓய்வூதியத்தாளர்கள் வீட்டில் இருந்து கொண்டே கைவிரல் ரேகை பதிவை பயன்படுத்தி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
இதற்கு ஓய்வூதியதாரர்கள் சம்பந்தப்பட்ட தபால்காரிடம் 70 சேவை கட்டணம் செலுத்த வேண்டும். தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களை வழங்கி கைவிரல் ரேகையை பதிவு செய்தால் மட்டும் போதும். சில நிமிடங்களில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க முடியும். இந்த அறிவிப்பு தமிழக முழுவதும் உள்ள ஓய்வூதியத்தாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.