ஓய்வூதியதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இது ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான சான்று ஆகும்.2022 வருடத்திற்கான வாழ்நாள் சான்றை வரும் செப்டம்பர் மாதத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்று தமிழக அரசு தெரிவி த்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றினை செப்.,30-ந் தேதிக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன்மூலம், இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்கள் வழியாக ஜீவன் பிரமான் முகம் செயலியினை பயன்படுத்தி ஆண்டு வாழ்நாள் சான்றினை பதிவு செய்யலாம். மேலும், ஓய்வூதியர்கள் சங்கங்கள் நடத்தும் முகாம்களில் பங்கேற்றும் வாழ்நாள் சான்றினை பதிவு செய்யலாம். இதற்கு இன்றே கடைசி நாளாகும்