Categories
மாநில செய்திகள்

தமிழக கடனில் தனது பங்கை…. செலுத்த முதல் நபராக வந்த இளைஞர்…!!!

அரசு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையில், தமிழக அரசுக்கு ரூ.ஐந்து லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 கடன்சுமை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதி இளைஞரான ரமேஷ் தியாகராஜன் என்பவர் ரூபாய் 2.63 லட்சம் கடன் தொகை கொண்ட காசோலை அடங்கிய அட்டையை தயார் செய்து நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து இருந்தார்.

ஆனால் திகைத்துப்போன கோட்டாட்சியர் அந்த இளைஞர் கொண்டு வந்த காசோலையை  வாங்க மறுத்துவிட்டார். மேலும் அதை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று வழங்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியரும் அந்த காசோலையை வாங்க மறுத்துவிட்டார்.

Categories

Tech |