Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரிகளில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 231 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தமிழகத்தில் உள்ள 167 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள்,பத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் 10 ஆயிரம் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு மேலாக இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐந்து பேர் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், ஆண்டு கணக்கில் அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த நிலையில் இது குறித்து பேசிய நீதிபதி, தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.எனவே விரைவில் 2331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |