Categories
மாநில செய்திகள்

தமிழக கல்வித்துறையின் புதிய முயற்சி…. ஊக்கப்பரிசு மூலமாக மாணவர் சேர்க்கை….!!!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 5 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு பள்ளிகளில் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கும் காலை உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு பள்ளிகள் திறப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பாகவே மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளின் தரம், இலவச கல்வி போன்றவற்றை மக்கள் உணர்ந்து கொள்ளும் விதமாக பேனர்கள் வைப்பதுடன், துண்டு பிரசுரங்களை விநியோகிக்க வேண்டும். அதன்பிறகு அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு ஊக்கபரிசு வழங்கப்படும். இதைத் தொடர்ந்து அரசு பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளியின் மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று அரசு பள்ளியின் கல்வித்தரம், நலத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை மக்களிடம் எடுத்துரைத்து குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |