தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கக் கூடிய வகையில் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று திடீரென டெல்லி பயணம் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் வருகின்ற வெள்ளிக்கிழமை வரையில் டெல்லியில் தங்கியிருந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.