Categories
தேசிய செய்திகள்

தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் உடனடியாக டெல்லி வருமாறு அழைப்பு!

தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரையும் உடனடியாக டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது.

வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கிய கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் காலை இன்று நடைபெற்றது. அதில் கட்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது.

இது ஒரு அரசியல் சூழ்ச்சி. இந்த வன்முறை சம்பவம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று. தேர்தலுக்கு பிறகு வேண்டுமென்றே இந்த சம்பவத்தை நிகழ்த்தி உள்ளனர்’ என்று கூறியுள்ளார்.மேலும் ‘டெல்லியில் நடந்த இந்த கலவரத்திற்கு மத்திய அரசும், உள்துறையும் பொறுப்பேற்க வேண்டும். டெல்லி வன்முறைக்கு பொறுப்பேற்று அமித்ஷா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரையும் உடனடியாக டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அனைவரும் தங்களது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு டெல்லி மேலிடம் அவசர அழைப்பு விடுத்து இருப்பது காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |