சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.
தமிழகத்தில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களை கௌரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி பொது சேவைக்கான முதல்வரின் பதக்கம் மற்றும் புலன் விசாரணை துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த விருதுகளை பெறுவதற்கு மொத்தம் 15 காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் சேவையில் சிறப்பாக பணியாற்றிய செம்மஞ்சேரி போக்குவரத்து சிறப்பு காவல் உதவியாளர் மா.குமார், மதுரை போக்குவரத்து சிறப்பு காவல் உதவியாளர் வை. பழனியாண்டி, கடலூர் தனிப்பிரிவு குற்றப் புலனாய்வு ஆய்வாளர் க. அம்பேத்கர், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோருக்கு முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்பட இருக்கிறது.
இதனையடுத்து புலன் விசாரணையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு முதல்வரின் சிறப்புப்பணி பதக்கங்கள் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி அடையாறு மதுவிலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் கா. இளையராஜா, சிபிசிஐடி உதவி ஆய்வாளர் பார்த்தசாரதி, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் துளசிதாஸ், காரியாபட்டினம் ஆய்வாளர் நாகலட்சுமி, கொடைக்கானல் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி, கோடம்பாக்கம் காவல் ஆய்வாளர் சீனிவாசன், ரோஷனை காவல் ஆய்வாளர் பிருந்தா, சேலம் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன், மதுரை மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் உட்பட 10 பேருக்கு வழங்கப்பட இருக்கிறது. இவர்களுக்கு 1 பவுன் பதக்கம் மற்றும் 25 ஆயிரம் ரொக்க பணம் வழங்கப்பட இருக்கிறது. மேலும் பதக்கம் மற்றும் பரிசுத்தொகை வேறொரு நாளில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.