Categories
அரசியல்

“தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது”… பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்…!!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கிற அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் தமிழரின் மாண்பையும், தமிழரின் மரபையும், தமிழரின் தொன்மையும், இறை நம்பிக்கையையும் இழிவுப்படுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக தாய்மார்களை தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு கோவை மாவட்டத்தில் ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு தெரிவித்த பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வருகின்ற 26 ஆம் தேதி அறவழியில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது. தமிழினத்தை தமிழ் பெண்களை இழிவுபடுத்து கேவலப்படுத்தும் ஆ ராசா போன்ற ஆளும் கட்சி நபர்களை எல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறை ஜனநாயக ரீதியாக அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் பொய் வழக்கில் கைது செய்து அச்சுறுத்தி வருகின்றார்கள்.

மேலும் சில திமுக வழக்கறிஞர்கள் நீதிபதியே அச்சுறுத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் திமுகவின் அராஜகமும் ஆளும் கட்சி என்பதனால் நடத்தும் அத்துமீறலும் கண்டிக்கத்தக்கதாகும். மேலும் திமுகாவின் பொய் வழக்கை கண்டும் கைது நடவடிக்கையை கண்டும் எந்த பாஜக தொண்டனும் அஞ்சப் போவதில்லை தவறு யார் செய்தாலும் தட்டி கேட்க பாஜக தயங்காது. மேலும் தமிழின தாய்மார்களை தரம் தாழ்த்தி பேசிய ஆ.ராசாவை கைது செய்யாமல் பாதிக்கப்பட்டவர்கள் மேல் பொய் வழக்கு போட்டு கைது செய்து வந்த விதத்தில் நியாயம் காலம் உங்களை கண்டிப்பாக தண்டிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |