தமிழக கிராமங்களில் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அனைவரும் இணைய வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி கற்க முடியாமல் தவிக்கிறார்கள். அதனால் தமிழக கிராமங்களில் அதிவேக இணைய வசதி அளிக்க பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த கூடுதலாக 351 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து பாரத் நெட் திட்டத்திற்கான தொகையை 2222 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதன் மூலம் 12,544 கிராமங்களிலும் அதிவேக இணைய வசதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அனைவரும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.