Categories
மாநில செய்திகள்

தமிழக கிராமங்களில் மருத்துவ முகாம்…. ரூ.25 செலவில்…. அரசு புதிய அதிரடி……!!!!!

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாயை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். இதையடுத்து அவர் பேட்டியளித்தபோது, “தொலைதுார கிராமங்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்கும் அடிப்படையில் 70 கோடி ரூபாய் செலவில் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வாரம் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இதில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாகனம் மூலம் மாதத்திற்கு 40 மருத்துவ முகாம்கள் என்று 80 ஆயிரம் கிராமங்களில் நடத்தப்படும். கொரோனா பாதிப்பால் இறந்த 129 முன்கள பணியாளர்களுக்கு மத்திய அரசு சார்பாக தலா 50 லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பாக 39 பேருக்கு தலா 25 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தாலும் உலக நாடுகளை அச்சுறுத்தும் அடிப்படையில் மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மற்றொரு அலை உருவாகாமல் தடுக்கவும், தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, டில்லியில் சந்திக்க இருக்கிறோம். அப்போது பெரம்பலுார், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், காஞ்சிபுரம் போன்ற 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரிகள் அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்படும். அதேபோன்று உக்ரைனில் இருந்து தமிழ்நாடு வந்த மாணவர்களின் கல்வியை இந்தியாவில் தொடர அனுமதி, மதுரை, கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை, நீரிழிவு நோய்க்கு பட்டப்படிப்பு அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்த இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

Categories

Tech |