எல்லைப் பகுதியில் Digital Re-Survey செய்து, தமிழகத்திற்கு சொந்தமான கிராமங்களை ஆக்கிரமிக்க கேரளா அரசு முயற்சிப்பதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு வாரமாக நடைபெறும் இந்த அத்துமீறலை திமுக அரசு தடுக்கவில்லை. ஆகவே இனியாவது ஸ்டாலின் அரசு விழித்துக் கொள்ளுமா?, இல்லை தம் கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப் போகிறார்களா? என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
முன்னதாக மறுஅளவீடு செய்வதாக தமிழகத்திற்கு சொந்தமான நிலங்களை கேரள அரசு ஆக்கிரமிப்பதை தடுக்கவேண்டும் என்று பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் போன்றோர் வலியுறுத்தினர்.