Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

BCCI மூலம் நிதிபெற முடியாத தமிழக வீரர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டுக்கு முன்பு ஓய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.  அதன்படி 10 முதல் 20 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாயும், 1 முதல் 9 ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ள வீரர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தை அணுகலாம் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |