தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கு மத்தியில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி அமைந்ததையடுத்து ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு கொரோனா நிதி, மளிகை பொருட்கள் வழங்கபட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகள் 5,000 க்கும் மேல் உள்ளன. அக்கடைகளை பிரித்து பகுதிநேர கடைகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நடமாடும் ரேஷன் கடைகளுக்கு பொதுமக்களிடம் வாடகையை வசூலிப்பதாக புகார் எழுந்தது குறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வோம் என்றும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.