தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பரிசு தொகுப்பில் 21 பொருள்கள் இருக்கின்றதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 180059935430 என்ற எண்ணிலும் துறை சார்ந்த அதிகாரிகளிடமும் புகார் அளிக்கலாம். புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.