தமிழகத்தில் பயோமெட்ரிக் முறை, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயோமெட்ரிக் இயந்திரத்தில் கை ரேகை வைத்து ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையில் பயோமெட்ரிக் முறை சரியா ? குறிப்பாக வயதானவர்களுக்கு ரேகைகளில் சுருக்கங்கள் மற்றும் தேய்வு ஏற்படுவதால் அவர்களுடைய கைரேகை இயந்திரத்தில் பதிவாகவில்லை.
இதனால் அவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது அவசியமாகிறது. ஆதார் பயோமெட்ரிக் முறையை அப்டேட் செய்ய நீங்கள் ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் ஆதார் பயோமெட்ரிக் முறையை அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மையத்தை நாடி ஏராளமானோர் செல்கின்றனர்.
ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகை பதிவு ஆகாததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து தொழில்நுட்பம் மற்றும் இணைய இணைப்பு கோளாறுகளால் கைரேகை பதிவாகாத காலங்களில் கைரேகை சரிபார்ப்பு இன்றி உரிய பதிவுகளை மட்டும் மேற்கொண்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்றியமையா பண்டங்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.