Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைத்தாரர்கள் கவனத்திற்கு… ஸ்மார்ட் கார்டு பற்றி தெரிஞ்சுக்கணுமா…. இதோ முழு விவரம்…!!!

TNPDS ஸ்மார்ட் கார்டு தொடர்பான சேவைகளை பற்றிய முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முக்கிய ஆவணங்களில் ஒன்று ஸ்மார்ட் ரேஷன் கார்டு. இதில் முகவரி மாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினரின் பெயரை சேர்த்தல் அல்லது நீக்குதல் போன்ற செயல்முறைகள் குறித்து பல குழப்பங்கள் எழுந்து வருகிறது.

மேலும் இதற்காக மக்கள் அலுவலகத்திற்கு அலைய வேண்டுமோ என்ற பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்திற்கு பதிலளிக்கும்போது வகையில் வீட்டிலிருந்தபடியே நாம் இந்த முறைகளை எளிமையாக ஆன்லைனில் செய்வதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பதற்கு,

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in ஐ பார்வையிட வேண்டும்.
  • இதன் பின் ‘ஸ்மார்ட் கார்டு தொடர்பான சேவைகள்’ பிரிவின் கீழ் உள்ள “உறுப்பினரைச் சேர்” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • இதையடுத்து ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினரின் பெயரைப் பெற, பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் அவரது புகைப்படத்துடன் புதிய குடும்ப உறுப்பினரின் விவரங்களை உள்ளிடவும்.

இதையடுத்து குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பெயரை நீக்குவதற்கு,

  •  tnpds.gov.in என்ற தளத்தில் “ஸ்மார்ட் கார்டு தொடர்பான சேவைகள்” பிரிவின் கீழ் உள்ள “குடும்ப உறுப்பினரை அகற்று” இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன்பின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரை உள்ளிட்டு ஏற்கனவே உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை பதிவிட வேண்டும். மேலும் அவர்களை ரேஷன் கார்டில் இருந்து விலக்கவும் செய்யலாம்.

இதனை தொடர்ந்து ரேஷன் கார்டில் உள்ள முகவரியை மாற்றுவதற்கு,

  • tnpds.gov.in என்ற தளத்தில் “முகவரியை மாற்ற” இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் புதிய முகவரியைச் சேர்க்கலாம்.
  • மேலும் முகவரியைத் திருத்த / புதுப்பிக்க புதிய குடியிருப்புச் சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டில், தற்போது குடும்பத் தலைவரை மாற்றுவதற்கான வழிமுறையும் உள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள்,

  • tnpds.gov.in தளத்தில்“குடும்பத் தலைவரை மாற்ற” என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் புதிய குடும்பத் தலைவரைச் சேர்க்கலாம்.
  • மேலும் புதிய குடும்பத் தலைவர் விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.

அதன்படி, TNPDS தமிழ்நாடு ஸ்மார்ட் ரேஷன் கார்டு விவரங்கள் பக்கத்தில் உள்ள அனைத்து செயல்பாடுகளுமே, ஆன்லைனில் தான் செயல்படுகிறது எனவும், மேலும் குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் மாற்றம் மற்றும் அட்டை சரண்டர் / ரத்து செய்வதற்கான வசதியும் இதில் உள்ளது.

இதையடுத்து விண்ணப்பதாரர்கள் கார்டு தொடர்பான சேவை கோரிக்கை நிலையை சரிபார்க்கலாம். மேலும் இது குறித்த ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்களுக்கு, 1967 அல்லது 1800-425-5901 என்ற பொது விநியோக அமைப்பின் (PDS) கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |