தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் மீது பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனை நிறைவேற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் தற்போது நிபந்தனைகளின் படி தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் உண்மையாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி ஆனது. அதில், கரூர் மாவட்டத்தில் 19,554 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி மூலம் ரூ.69.49 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மருத்துவர் த.பிரபுசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.