Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழக-கேரள எல்லைகளில்…. கண்காணிப்பு தீவிரம்…. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் அனுமதி….!!

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதையொட்டி தமிழக-கேரள எல்லைகளில் வாகனங்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கபடுகின்றன.

கேரள மாநிலம் ஆலப்புழாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. எனவே  தமிழக-கேரளா எல்லையான தேனியில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் போடிமெட்டு, கம்பம்மெட்டு, மற்றும் குமுளி போன்ற சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகன டிரைவர்கள் தடுப்பூசி 2 தவணைகளும் செலுத்தி இருந்தால் மட்டுமே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கால்நடை மற்றும் கோழி தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.

Categories

Tech |