குரங்கம்மை நோய் பரவலை தடுப்பதற்காக தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரளாவில் தற்போது குரங்கம்மை வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரள எல்லை பகுதியான போடி, கம்பம்பட்டு, குமிழி போன்ற பகுதிகளில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் வாகனங்கள் வருகிறது.
இதன் காரணமாக கம்பம்பட்டு பகுதியில் உள்ள பழைய போலீஸ் சோதனை சாவடியில் மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் முருகன் தலைமை தாங்குகிறார். இவர்கள் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் தலைவலி மற்றும் குரங்கம்மை தொற்று இருக்கிறதா என்பதை சோதனை செய்கின்றனர்.