Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தமிழக கோயிலில் காசு மட்டுமே பிரதானம்…. “2 மணி நேரம் காத்திருந்த பக்தர் ட்விட்”…. விரைந்து செயல்பட்ட இந்து அறநிலையத்துறை…!!!!!

தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம் என பக்தர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சலசலப்பு ஏற்பட்டது.

நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்கள். பொது தரிசனம் மட்டுமல்லாமல் 50 ரூபாய்க்காண கட்டண தரிசன வரிசையிலும் பக்தர்களின் கூட்டம் அழைமோதியது. இந்த நிலையில் நேற்று முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் தந்து தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால் பொது மற்றும் கட்டண வழியில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார்கள்.

பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இதனிடையே பக்தர் ஒருவர் “தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 50 ரூபாய் கட்டணம் வழி மற்றும் பொது இருக்கின்றது. இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசிக்க முடியவில்லை. இதற்கு அருணாச்சலேஸ்வரரே முடிவு கட்டுவார் என ட்விட்டர் பதிவின் மூலம் முதல்வருக்கும் இந்த சமய அறநிலையத்துறை பதிவிட்டு இருந்தார். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டு சிறப்பு தரிசன வழியை அடைத்து பொது மற்றும் கட்டண தரிசன வழியில் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்தார்கள்.

 

Categories

Tech |