சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கோயில்களில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசித்து, சூழ்நிலைகளை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதன் மூலம் விரைவில் கோயில்களில் விரைவில் கொரோனா கட்டுப்பாடு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலை, திருப்பதி கோயில் போல ஒரு முன்மாதிரி கோயிலாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.