தமிழகத்தில் 550 கோவில்களில் கணினி வழியாக அர்ச்சனை, அபிஷேகம், திருமணம், வாகன பூஜை உள்ளிட்ட 255 கட்டண சேவைகள் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். திமுக ஆட்சியில் அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக கோவில்களில் கணினி வழியாக சிறப்பு சேவைகளை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணையதள பக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரசீது பெறுவது தொடர்பான குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் 044-2833 9999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
Categories