தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட பணி முன்னேற்றம் மற்றும் இதர பணிகள் தொடர்பாக சீர் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகத்தில் உள்ள கோவில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும். பெரிய கோவில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி கட்டண தரிசனத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
விஐபி தரிசனம் என்பது இந்த ஆட்சியில் உருவானது அல்ல. நாளடைவில் அனைத்து கோவில்களிலும் விஐபி தரிசனம் விரைவில் முடக்கப்படும். திருக்கோவில்கள் என்பது அனைவருக்கும் சமம். உயர்ந்தவர் மற்றும் தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.