தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நினையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் தமிழக கோவில்களில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் மீட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.