தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் ஊரடங்கில் புதிய தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவில்களில் குடமுழுக்கு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு கூட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலைத்துறையானது கடவுளுக்கு தொண்டு செய்யும் மிகவும் புனிதமான துறையாகும்.
கோவில்களில் விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும். விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு அலுவலர்களுக்கான பணிச்சுமை குறைக்கப்படும் என்று கூறிய அவர் , ஓதுவார், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.