Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில் சிலைகள்…. டிஜிட்டல் அருங்காட்சியகம்…. அசத்தல் பிளான் போட்ட போலீசார்…..!!!!!

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கோவில்களில் திருட்டுபோன மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் பஞ்சலோக சுவாமி சிலைகள் 36, கற்சிலைகள் 265, மரச்சிலைகள் 73 என்று 374 சிலைகளை காவல்துறையினர்  மீட்டுள்ளனர். தற்போது இதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் நீதிமன்ற சொத்தாக இந்த சிலைகள் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த சிலைகளை காவத்துறையினர் சென்னை திருவொற்றியூர், எழும்பூர்அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பாக வைத்து வருகின்றனர். இந்த சிலைகளை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முப்பரிமாண வடிவில் பார்க்கும் அடிப்படையில்  சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் “டிஜிட்டல்” அருங்காட்சியத்தை உருவாக்கியுள்ளனர். அதன்படி பொதுமக்கள் www.tnidols.com என்ற இணையதளம் மூலம் பார்க்கலாம்.

இது தொடர்பாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி கூறியதாவது, நம் நாட்டின் பொக்கிஷமான சிலைகளை பாதுகாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். பழங்கால சிலைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட புதிய மென்பொருள் ஒன்றையும் உருவாக்கி வருகிறோம். ஆகவே சிலைகள், கலைபொருட்கள் ஆகியவை குறித்து பொதுமக்கள் எங்களை அணுகலாம். கோவில்களில் உள்ள அனைத்து சிலைகளையும் டிஜிட்டல் மயமாக்கி ஆவணப்படுத்தும் முயற்சியிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம் என்று அவர் கூறினார்.

Categories

Tech |