Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை… அரசு பெண் ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன்  வெளியிட்டுள்ள அறிவிப்புகள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 43,190 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 2,002மையங்களுக்கு வைப்பறையுடன் கூடிய சமையலறைகள் இருக்கின்றன. 2222 ஆம் ஆண்டில் 69 கோடி செலவில் 1291 கூடிய சமையலறைகள் கட்டுவதற்கு புதிய ஆணைகள் வெளியிடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இதன் தொடர்ச்சியாக 2,100 பள்ளி சத்துணவு மையங்களுக்கு 113 கோடி மதிப்பீட்டில் வைப்பறையுடன்  கூடிய சமையலறைகள் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் கட்டப்படும். சமூக நலன் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் போன்றவற்றின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை  ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக தலைமைச் செயலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் திட்ட மேலாண்மை அழகு ஒன்று ஏற்படுத்தப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் துண்டல்கழனி கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்கும் மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த வளாகம் அமைப்பதற்கான வடிவமைப்பு செலவில் மதிப்பீடுகளுடன் உகந்த கருத்து வடிவமைப்பை உருவாக்கும் பொருட்டு விரிவான சாத்தியக்கூறு ஆய்வு ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் சமூகத்தில் நிலவும் பாலின பாகுபாடு, பொருளாதார பின்னடைவு காரணமாக குழந்தைகள் விற்பனை, குழந்தை திருமணங்கள், குடும்பத்தில் கடன் சுமை காரணமாக தம்பதியினர் தற்கொலை, வரதட்சணைக் கொலைகள் பாலியல் ரீதியான குழந்தைகளும் பெண்களும் வன்கொடுமைக்கு ஆளாவது போன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இத்தகைய குற்றங்களை தவிர்ப்பதற்கு குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை வன்முறையால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ வசதி ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் பெற்றுத் தருதல் போன்றவற்றை ஓரிடத்தில் வழங்குவதற்காக மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, திண்டுக்கல் ஆகிய 10 மாநகராட்சிகளில் ஒரு சேவை மையத்திற்கு 1.10 கோடி வீதம் 10 ஒருங்கிணைந்த சேவை மையங்கள் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.

மேலும் 2022 இருபத்திமூன்றாம் நிதியாண்டு முதல் பாலின நிதிநிலை அறிக்கையை உறுதிப்படுத்துவதற்காக பாலினம் சார்ந்த கொள்கைகளை உருவாக்கி அதன் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களில் முன்னுரிமை அளிப்பதற்காக அனைத்து துறைகளிலும் பாலின வரவு செலவு திட்டம் உருவாக்கப்படுகிறது. மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில் குழந்தைகளின் முதல் ஆயிரம் நாட்கள் குறித்தவிழிப்புணர்வு ரூபாய் 1.74 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இல்லத்திற்கான புதிய கட்டடம் 16 கோடி ரூபாயில்  கட்டப்படுகிறது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவது தற்போது அதிகரித்து வருகின்றது. அவ்வாறு குழந்தைகள் பெறும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிப்பதுடன், அவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

Categories

Tech |