Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு தேர்வு…. வெளியான தகவல்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவையின் சபாநாயகராக ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளில்  நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால் அப்பாவு தேர்வு செய்யப்படுகிறார். தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்ற கு.பிச்சாண்டி துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார். இருவரும் நாளை மறுநாள் மனுதாக்கல் செய்கின்றனர். இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Categories

Tech |