முன்னாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.
தமிழக சட்டசபை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததோடு நிறைவடைந்த கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சாவித்திரி அம்மாள் , ராஜேந்திர பிரசாத் , குருதி மாவள்ளல்கோன் , பி.ஏ.கே.பி. ராஜசேகரன் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.