மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தனி தீர்மானத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்மொழிந்து உரையாற்றி வருகிறார்.. ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் டெல்லி, மேற்கு வங்கத்தை தொடர்ந்து தமிழகத்திலும் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.. இந்த வேளாண் சட்டத்துக்கு ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
அந்த அடிப்படையில் தற்போது இந்த மூன்று வேளாண் மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.. திமுக தோழமைக் கட்சிகளும் சட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் ஏழாவது மாநிலம் தமிழகம் ஆகும்..