Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை… 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமியில்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!!!

சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே 110 விதியின் மூலமாக ஓர் அறிக்கையினை தங்களின் அனுமதியோடு நான் இந்த அவையின் முன்வைக்க விரும்புகின்றேன்.

மனித சக்தி என்பது உடலையும், உள்ளத்தையும் இணைந்தது. இந்த இரண்டும் ஒருசேர இணைக்கும் மனிதர்களால் மட்டுமே அனைத்து துறைகளிலும் பொறியாளர்களாக மாறமுடியும். அந்த வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையின் சார்பில் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகின்றேன். அறிவு சக்தியை போன்றே உடல் வலிமையும் ஒரு சொத்து. அத்தகைய உடல் வலிமையை அடைவதற்கு பல்வேறு பயிற்சிகள் இருந்தாலும் விளையாட்டு என்பது அதில் மிகவும் முக்கியமானதாகும்.தமிழ்நாடு அரசால் அண்மைக்காலமாக விளையாட்டுத் துறைக்கு ஏராளமான திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை மாணவர்களும், இளைஞர்களும் சீரிய முறையில் ஒருங்கிணைந்து பயன்படுத்திக் கொண்டால், தமிழ்நாட்டின் இளைய ஆற்றல் எழுச்சி பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. மேலும் அரசால் ஏற்படுத்தப்பட்ட விளையாட்டுக் கட்டமைப்பு, பயிற்சி வசதிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அளிக்கப்படக்கூடிய உயரிய ஊக்கத் தொகை ஆகியவைதான் அதன் அடிப்படைக் காரணங்கள்.

ஓலிம்பிக் போன்ற பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்த தமிழ்நாட்டின் நான்கு மண்டங்களில் தலா ஒன்று வீதம் நான்கு ஓலிம்பிக் அகாடமிகள் அமைக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் விளையாட்டுப் பயிற்சிகள், அதற்கான வசதிகள் ஏற்படுத்த நினைக்கிறோம். அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும், தலா 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் நிறுவப்படஇருக்கின்றன.  இதன்மூலம், ஏழை எளிய, நடுத்தரக் குடும்பங்களைச் சார்ந்த கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வாழக்கூடிய இளைஞர்கள் பலன் பெற வழிவகை செய்யப்பட இருக்கிறது.
தமிழக விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒரு முயற்சியைத் தொடங்கவிருக்கிறோம். “ஒலிம்பிக் தங்கம் தேடுதல்” என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது’ என கூறியுள்ளார்.

Categories

Tech |