தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை தொடர்பாக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. நடைபாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மற்றும் மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.
மேலும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கும் பள்ளி மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதால் இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித் தொகைக்கு நவம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விபரங்களை http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.