தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக பொதுமக்கள் தங்களுடைய வேலைகளை இழந்து வருகின்றனர். இதை சரி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடைநிலை சுகாதார பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.
இந்த பணியில் சேர்பவர்கள் தற்காலிக அடிப்படையில் மட்டுமே பணிபுரிபவர்கள் மேலும் 117 இடைநிலை சுகாதார பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பணிக்கு 50 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கான கல்வித்தகுதி செவிலியர் பட்டயப் படிப்பு அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் அத்துடன் தமிழ்நாடு குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தில் இளங்கலை செவிலியர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதேபோன்று பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பிரிவில் 62 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதில் பல்நோக்கு சுகாதார பணியாளர் பிரிவில் ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கும் 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இந்த பணியிடத்தில் சேர விரும்புபவர் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10-ஆம் வகுப்பில் தமிழ் வழி கல்வியில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
மேலும் 2 ஆண்டு பல்நோக்கு சுகாதார ஆய்வாளர் அல்லது துப்பரவு ஆய்வாளர் ஆகிய கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை http://num.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக பெறலாம். இந்தப் பணிக்கு வருகிற டிசம்பர் 15-ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் வரை விண்ணப்பித்து முடிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களை செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.