Categories
மாநில செய்திகள்

தமிழக சுகாதாரத் துறையில் மாஸ் அறிவிப்புகள்…..வெளியான சூப்பர் தகவல்…..!!!!

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை ரீதியான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. எனவே இவற்றின் வரிசையில் நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

1. அதன்படி புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

2.மேலும் பரமக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மன்னார்குடி கும்பகோணம், சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, மாநில பொது சுகாதார மையம் ஆகிய 10 இடங்களில் பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கன்குனியா, நிபா வைரஸ் காய்ச்சல் நிலையை கண்டறிய ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை திட்டத்தின் கீழ் ரூ 12 கோடி மதிப்பீட்டில் புதிய RT-PCR பரிசோதனை கருவிகள் நிறுவப்படும்.

3. இதையடுத்து தமிழ்நாட்டில் 25 அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவதற்காக ஒலி புகா அறை மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய் 5 கோடி செலவில் வழங்கப்படும்.

4. சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உடற்கூறு திசுக்களை சுத்திகரிக்க நவீன காமா கட்டமைப்பு ரூபாய் 1.9 கோடி செலவில் கட்டப்படும்.

5. இதனை தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அரசு மருத்துவமனையில் உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் விஷ முறிவு சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

6. மேலும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர் சிறப்பு சிகிச்சை வழங்க உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூபாய் 125 கோடி மதிப்பில் புதிய கட்டடம் மற்றும் கருவிகள் வழங்கப்படும்

7. கோயம்புத்தூர், மதுரை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஜப்பான் பன்னாட்டு முதன்மை திட்டத்தின்கீழ் ரூபாய் 110 கோடி மதிப்பில் கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும் .

8. சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை,விபத்து காய சிகிச்சை பிரிவு தொற்றா நோய் பிரிவு, டயாலிசிஸ்,ரத்த வங்கி போன்ற சேவைகளை வழங்க உலக வங்கி திட்டத்தின்கீழ் ரூபாய் 71.81 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்

9. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் சிறந்த மருத்துவ சேவையை பெறுவதற்காக நவீன உபகரணங்களுடன் கூடிய நரம்பியல் பிரிவு ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

10. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சேலம், திருவண்ணாமலை மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு இதய நோய்களுக்கான சிகிச்சை முறைகளை வலுப்படுத்த கேத்லேப் ( cathlab) கருவிகள் ரூபாய் 16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்

11. நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய எம்ஆர்ஐ ஸ்கேன் ரூபாய் 8.5 கோடி செலவில் வழங்கப்படும்

12. நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் நடமாடும் இரத்த சேமிப்பு வாகனம்,HPLC கருவி மற்றும் வேதியல் பொருட்கள் வழங்கப்படும்.

13. இனி இருக்கப்போகும் நம்மைக் காக்கும் பொருட்டு தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய ஆறு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும், ஒட்டன்சத்திரம், சீர்காழி, மேலூர், ஊத்தங்கரை ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளிலும் தலா 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (critical care blocks 237.50 ரூபாய் கோடி மதிப்பில் நிறுவப்படும்.

15. மேலும் இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின்கீழ் கடலூர் அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி கொண்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு ரூபாய் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட 136 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

Categories

Tech |