Categories
மாநில செய்திகள்

தமிழக சுய வேலைவாய்ப்பு திட்டம்….. இவர்களுக்கு கூடுதல் சலுகைகள்….. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தில் சிறப்பு பிரிவினர் பயன்பெறக்கூடிய வகையில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது என்று சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலர் வி. அருண் ராய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் திட்டம் 2010 2016 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டது ம் தமிழக அரசின் நிதி உதவியால் செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நிதி சார்ந்த உதவிகள் அளிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் இணைய குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்த வகுப்பினர், பிற்படுத்த வகுப்பினர், பெண்கள், சிறுபான்மையர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் 45 வயது வரை இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமில்லாமல் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருப்பதுடன் ஆண்டு குடும்ப வருமான ரூ.5 லட்சத்தை தாண்டக்கூடாது. இதனையடுத்து மாற்றித்திறனாளிகள் மனநல பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்டிருக்கக்கூடிய பெற்றோர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வயது 45 இருந்து 55 ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் நீக்கப்படுகிறது. இதற்கான உத்தரவு உடனடியாக அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |