தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க முடிவு செய்து 1996 ஆம் வருடம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி அவ்வாறு செய்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். மது பாட்டில்களை மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்யும் 5 லட்சத்திற்கும் மேல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக அரசு மதுபானங்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் எந்த திட்டமும் தமிழக அரசிடம் இல்லை என்று பதிலளித்துள்ளது.