தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்க தமிழக அரசானது குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. அதன்படி ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் இதற்கான முழு கல்வி கட்டண செலவையும் அரசே ஏற்கிறது. மேலும் ஆண்டுதோறும் தகுதி உடைய மாணவர்களை தேர்ந்தெடுத்து, தனியார் பள்ளிகளில் கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஏழை, எளிய மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றன. இதையடுத்து தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்புகளில் 25 % ஒதுக்கீடானது மாணவர்களுக்கு கல்வி கற்க அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் 2022-23 ஆம் ஆண்டு தற்போதைய கல்வியாண்டுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், வருகிற 20-ஆம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கையானது தொடங்க உள்ளது.
எனவே விண்ணப்பிக்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோர்கள் www.rte.tnschools. gov. in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானமானது 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனையானது கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த 25 சதவிகிதத்தின் கீழ் மாணவர் சேர்க்கையானது ,மெட்ரிக் பள்ளிகள் நர்சரி, பிரைமரி பள்ளிகள் என மொத்தம் 355 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை போல் நாமக்கல் மாவட்டத்தில் 158 பள்ளிகளிலும், தர்மபுரி மாவட்டத்தில் 163 பள்ளிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 226 என 4 மாவட்டங்களிலும் மொத்தமாக 902 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது.