Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவு… புதிய பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மூன்று நாட்களில் வாக்குப்பதிவு சதவீதம் மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்கு இயந்திர கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் வாக்களித்தனர். அதிலும் சில கட்சிகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கலவரம் செய்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 72.78%வாக்குகள் பதிவான நிலையில் தற்போது வாக்குப்பதிவு சதவீதம் மாறியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |