Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக தேர்தல் இரத்து….. 1ஆண்டுக்கு ஜனதிபதி ஆட்சி…. பரபரப்பை கிளப்பிய அரசியல் கட்சி …!!

தமிழகத்தில் 6மாதத்திற்க்கோ அல்லது ஒரு வருடத்திற்க்கோ ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு எங்கும், இந்தியா எங்கும் கொரோனா இந்திய மக்களை வாட்டி வதைக்கக்கூடிய நேரத்தில் ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக் கொள்ளக்கூடிய வகையில் முக கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும்.

தமிழக மக்களுடைய நலன்… இந்திய மக்களுடைய நலன் கருதி தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்திய பிரபா சாகு , அவர்களை நான் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தேன். என்னுடன் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞசர்கள் சக்திவேல் உள்பட நண்பர்களும் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தலை நாம் சாதாரணமாக பார்க்கக்கூடாது. உலகத்தில் எல்லா நாடுகளிலும் எல்லா மக்களுக்கும் வாக்குரிமை கிடையாது. ஜனநாயகம் என்று அழைக்கபடக்கூடிய நாடுகளில் தான் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்குரிமை இருக்கின்றது.

அந்த வாக்குரிமை மூலமாக மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்திற்கும்,  மக்கள் மன்றத்துக்கும் தேர்ந்தெடுக்கபடுகிறார்கள். அந்த பிரதிநிதிகள்  தான் மக்களை ஆட்சி செய்வார்கள். அவர்கள் மூலமாகத்தான் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கிடைக்கின்றன. எனவே அந்த வகையில் வாக்குரிமை என்பது 5 ஆண்டு காலத்துக்கு ஒரு முறை தங்களுக்கான மக்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும்.

எனவே தான் அந்த வாக்குரிமை என்பது ரகசியமாக நடைபெற வேண்டும். எந்த விதமான ஆசை வார்த்தைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆட்படாமல் இருந்திட வேண்டும் என்று ரகசிய வாக்கெடுப்புகள் நடைபெறுகின்றன. இந்த முறை தமிழ்நாட்டுல இதுநாள் வரையிலும் இல்லாத அளவிற்கு… இலை மறைவு, காய் மறைவாக சட்டமன்ற இடைத்தேர்தல்களிலே கடந்த காலங்களில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் அல்லது பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் 234  தொகுதிகளிலும் இந்த முறை எந்தவிதமான கூச்சமோ, அச்சமாமோ இல்லாமல் ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் முன்பாக கவுண்டர்கள் அமைத்து   பட்டவர்த்தனமாக, 500 ரூபாய் முதல் 5000ரூபாய் வரையிலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு,  வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டு இருக்கின்றன. இது ஒரு ஜனநாயகத்துக்கு ஒரு மிகப்பெரிய , ஆபத்தான போக்குகள் ஆகும்.

எனவே தான்  இப்பொழுது நடைபெற்றிருக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தல் என்பது ஜனநாயகபூர்வமாக நடைபெற்றது அல்ல… சுதந்திரமாக நடைபெற்ற தேர்தல்ல. இது ஊழல் படுத்தப்பட்டு நடைபெற்ற தேர்தல் ஆகும். எனவே இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. தேர்தல் ஆணையத்திற்கு இது போன்று நடக்கக்கூடிய ஊழல்களை கட்டுப்படுத்துவதற்குண்டான எல்லா விதமான அதிகாரம் இருக்கிறது. எனவே தான் வரக்கூடிய மே மாதம் 2ஆம் தேதி நடைபெறக்கூடிய வாக்கு எண்ணிக்கையை, எண்ணக்கூடாது, நிறுத்தி வைக்க வேண்டும்.

உச்ச நீதிமன்ற அமர்வு நீதிபதிகளுடைய தலைமையிலே தமிழ்நாட்தில்  234 தொகுதிகளிலேயும் முறையாக ஆய்வு செய்து,  எந்தெந்த வேட்பாளர்கள்ளெல்லாம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்பதை ஆய்வு செய்து, அதன் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . அவர்கள் செலவு செய்த கணக்குகளை அந்த வேட்பாளர் உடைய செலவு கணக்கில் சேர்த்து, அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல இந்த தேர்தலை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து, குறைந்தது ஆறு மாத காலத்திற்கோ அல்லது ஒரு வருட காலத்திற்கு எல்லாம் சரியாகும் வரையிலும் ஜனாதிபதி ஆட்சியை, தமிழகத்திலே அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரபா சாகுவிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |