தொலைத்தொடர்பு துறையில் துணை பிரிவு பொறியாளர் மற்றும் ஜூனியர் தொலைத்தொடர்பு பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சென்னையில் பணியமக்கப்படுவார்கள். இதற்கு ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நவம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம் 35 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர் அரசு அல்லது யுஜிசி யால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் / கம்ப்யூட்டர் சயின்ஸ் / டெலிகம்யூனிகேஷன் / ஐடி / இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகியவற்றில் பி.இ/ பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.