Categories
மாநில செய்திகள்

தமிழக தொழில் நிறுவனங்களில் தமிழருக்கே முன்னுரிமை…. அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்….!!!!!

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டையில் உள்ள ஜிஎம்ஆர் தொழில் பூங்காவில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் திருவாளர்கள் டாடா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மின்னணு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக தன்னுடைய தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலையானது ரூபாய் 4864 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 18,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொழிற்சாலையின் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப் படுவதாக செய்திகளில் தகவல்கள் வந்து கொண்டிருப்பதாக அவ்வப்போது என்னுடைய காதுகளுக்கு தகவல் வந்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்பிறகு இந்த நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த 80 விழுக்காடு பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்துள்ளது. இந்த நிறுவனத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அரசு முதன்மை செயலாளர் ஆகியோர் கலந்தாலோசனை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக திருவள்ளுவர், நாகப்பட்டினம், நாமக்கல், நாகர்கோவில், தென்காசி, தஞ்சை, விருதுநகர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திண்டுக்கல், காஞ்சிபுரம், தேனி, நெல்லை, மதுரை, வேலூர், சிவகங்கை, ஈரோடு, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

இந்த வேலை வாய்ப்பு முகாம்களின் மூலம் 1993 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 நாட்கள் நடத்தப்பட்ட வேலை வாய்ப்பு முகாம்களின் போது 355 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பொருட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்

Categories

Tech |