Categories
மாநில செய்திகள்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியாளர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணியில் ஈடுபடும் 27,000 பணியாளர்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார். இதனிடையில் முதல் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த வாரம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இறுதிக்கட்ட தேர்தல் வகுப்பு பிப்ரவரி 18ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |