தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் சில ஏமாற்றமளிக்கும் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்வி கட்டணம் ரத்து, அரசு ஊழியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம், அரசு துறைகள் – கல்வி நிலையங்களில் 3.5 லட்சம் காலி இடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை குறித்து பட்ஜெட்டில் இல்லாதது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயல் என்று ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.