தமிழகத்தில் சராசரியாக 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு அலுவலகத்திலும் தினசரி 200 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்படுகின்றன. இந்த பத்திர பதிவுகள் ஆன்லைனில் நடைபெறுவதால் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இணையதள சேவை பெறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிக அளவு பத்திரங்கள் பதிவு செய்யப்படும் பட்சத்தில் இணைய சேவையில் சில தடங்கல்கள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதற்கு தீர்வு காணும் வகையில் சார்பதிவாளர் அலுவலக அதிகாரிகள் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். அதன்படி இணையதள சேவை 2 எம்பி அலைவரிசையை 4 எம்பியாக மேம்படுத்தினால் வேகமாக பணிகள் நடைபெறும். முதலாவதாக 100 அலுவலகங்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பதிவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.